2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிலந்திகளால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எத்தகைய அரண்மனைக்குள் வசித்தாலும் சிறிய கரப்பான் பூச்சியொன்று நம்மை தாண்டிச் சென்றாலே வீரிட்டு அழுது ஊரை கூட்டிவிடுவது எமது வழமை. இக்குடும்பமும் அதற்கு விதிவிலக்கா என்ன?

கொடிய விஷமுள்ள 6000 சிலந்திகள் வீட்டைச் சுற்றி சூழ்ந்துகொண்டதால் வாழ்ந்த வீட்டை வீட்டே குடும்பமொன்று வெளியேறியுள்ளாது.

அமெரிக்காவின்  மிசுரியில் வாழ்ந்து வந்த பிரெய்ன் மற்றும் சுசன் டுரொஸ்ட் ஆகிய தம்பதியினரும் அவர்களது நான்கு பிள்ளைகளுமே இவ்வாறான நிர்க்கதி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.  

இவர்கள் வாழ்ந்த வீட்டை, கொடிய விஷமுள்ள 6000 சிலந்திகள் சூழந்துகொண்டு இவர்களை அச்சுறுத்தலுக்கு ஆழ்த்தியுள்ளன.

'குளியலறையில் குளித்துகொண்டிருந்த போது பழுப்பு நிறத்திலான சிலந்தியொன்று என்மீது விழுந்தது. நான் அதை தட்டிவிட்டு சென்றேன். எங்களது வீட்டிலுள்ள சுவர்களில் சிலந்திகள் இவ்வாறு ஒட்டிகொண்டுள்ளன. இதனை பார்ப்பதற்காவே மிகவும் பயமாக உள்ளது' என சிலந்திகள் குறித்து டுரொஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டுரிமையாளர்கள் மீது டுரொஸ்ட் தம்பதியினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால், இக்குற்றச்சாட்டை வீட்டுரிமையாளர்கள் மறுத்துள்ளனர். 'நாங்கள் வசிக்கும்போது இவ்வாறான சிலந்தி தொல்லைகள் இருக்கவில்லை' என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனினும் டுவர்ஸ்ட் தம்பதியினருக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை நீதிமன்றம் வீட்டு உரிமையாளர்களுக்கு செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. 

வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே கடன் பிரச்சினையில் சிக்கி திணறிகொண்டிருந்ததால் நீதிமன்ற உத்தரவுக்கமைய செலுத்த வேண்டிய பணத்தை டுவர்ஸ்ட் தம்பதியனிருக்கு அவர்கள் செலுத்தவில்லை.

வீட்டுக்கு செலுத்திய முழு வாடகை பணத்தையும் மீள பெறும் முயற்சியை கைவிட்ட டுரொஸ்ட்; இறுதியாக காப்புறுதி பணத்தை பெற முய்சித்தார். ஆனால், காப்புறுதி பணமும் கைகொடுக்கவில்லை. இதனால் பெறும் நஷ்டத்தை டுரொஸ்ட்; தம்பதியினர் எதிர்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • ketharam Sunday, 02 November 2014 07:59 PM

    இதில் என்ன அர்த்தம் தெரிகிறது....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X