2025 மே 15, வியாழக்கிழமை

சிங்கத்தின் கால்களுக்கு மஸாஜ்

Kogilavani   / 2014 நவம்பர் 05 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிங்கத்தின் பெயரைக் கேட்டால் கால் நடுங்குபவர்களையே நாம் அதிகம் கண்டதுண்டு. ஆனால், சிங்கத்தின் பாதங்களுக்கு மசாஜ் செய்யும் நபரை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆம், தென்னாபிரிக்கா. பிரிட்டோரியாவிலுள்ள பூங்காவில் மிருகங்களை பயிற்றுவிக்கும் நபரொருவர் சிங்கத்திடம் மிக நெருங்கி பழகும் காட்சிகளடங்கிய வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியாகி பலரை வியப்படைய வைத்துள்ளது.

கையில்லாத ஆடையையும் மற்றும் அரைக் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த மேற்படி நபர் சிங்கத்தின் அருகில் சென்று அதனது கால் பாதங்களை பிடித்துவிடுகிறார். சிங்கம் தரையில் புரண்டவாறும் உறுமியவாரும் காணப்படுகின்றது.

இம் மிருககாட்சி சாலையில் இவ்வாறான 4 சிங்கங்கள் காணப்படுகின்றன. இதேவேளை, புலிகள், நரிகள் மற்றும்  காட்டுப் பன்றி என்பவையும் காணப்படுகின்றன.

இவ்வீடியோவை இலட்க்காணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

வீடியோ இணைப்பு...



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .