2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பழமையான கல்லறை

Gavitha   / 2014 நவம்பர் 12 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட அமெரிக்காவில், பழங்குடி மக்களின் கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 11,500 வருடங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட மூன்று சிசுக்களின் சடலங்கள் அடங்கிய கல்லறையே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பலியோ இந்தியர்கள் என்று கூறப்படும் பழங்குடியர்களின் இனத்தைச் சேர்ந்த மூன்று சிசுக்களே இக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்விடத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் போது சிசுக்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து இவ்விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு சிசுக்கள் பிறந்தவுடன் இறந்திருக்கலாமென்றும் அவை இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கலாமென்றும்; ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லறை காணப்பட்ட ஸ்தலத்தில், பழங்குடியர்கள் குடியிருந்த வீடுகள், பெரிய விளையாட்டு மைதானங்கள், பறவைகளின் எச்சம் மற்றும் மம்மத் என்று கூறப்படும் பாலூட்டிகளின் எச்சங்களும் காணப்படலாம் என்று கூறப்படுகின்றது.

முறையான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளின்றி இவ்வாறான  சிசுக்கள் உயிரிழந்ததன் காரணமாகவே பழங்குடியினரின் வரலாறு அழிந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X