2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஆங்கிலம் பேசாத சிறுவனை அடித்துக்கொன்ற ஆசிரியை

Gavitha   / 2014 நவம்பர் 12 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான்.  இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான்.

இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அது சாதாரண காய்ச்சல் என்று பெற்றோர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. நள்ளிரவில் சிறுவனது நிலைமை மிகவும் மோசமாக காணப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்திலுள்ள வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனது மரணத்துக்கு ஆசிரியரும் கவனயீனமற்ற பாடசாலையும் காரணம் என்று கோரி குறித்த ஆசிரியையையும் அதிபரையும் கைது செய்யுமாறு மரணமடைந்த சிறுவனது பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X