2025 மே 15, வியாழக்கிழமை

உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தைக்காக தந்தை பாடிய தாலாட்டு

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


குழந்தை இறக்கும் தருவாயில் அதற்கு தாலாட்டு பாடிய தந்தையின் காட்சிகளடங்கிய வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியாகி பலரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.   

அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு கடந்த 8ஆம் திகதி குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார்.
தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. ஆனால் குழந்தை கடந்த 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில் அமர்ந்து கிட்டார் வாசித்துக் கொண்டே மெல்லிய குரலில் பாட்டுபாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவ்வீடியோவை, வியாழக்கிழமை மட்டும் 5 இலட்சத்துக்கும்  மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர். வீடியோவில் குழந்தையின் முகம் தெரியவில்லை. துணியால் குழந்தையின் உடலை சுற்றி வைத்து ஆங்காங்கே டியூப்கள் இணைக்கப்பட்டதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் கண்கலங்கினர்.

வீடியோ இணைப்பு



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .