2025 மே 15, வியாழக்கிழமை

மார்புக்கச்சையுடன் உலாவிய ஆண்

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்கள் அணியும் அனைத்து ஆடைகளையும் பெண்கள் அணிந்து கொண்டால், ஆண்களுக்கென்று ஓர் ஆடையும் இருக்காது என்று ஆண்கள் அடிக்கடி புலம்புவதை கேட்டிருப்பீர்கள். இதனால் தான் என்னவோ, பெண்களின் ஆடைகளை நாங்களும்தான் அணிந்துப் பார்ப்போமே என்று நினைத்த ஆணொருவர், பெண்களின் மார்புகச்சையொன்றை அணிந்துகொண்டு, வங்கியொன்றிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தில் பணம் பெறும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தியுமுள்ளார்.

இந்த நகைச்சுவையான சம்பவம், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கிரிகோரி ஹெர்ண்டன் என்று அறியப்பட்ட 33 வயதுடைய நபர், மார்புக்கச்சையொன்றை அணிந்துகொண்டு வங்கியொன்றின் வெளிப்பகுதியைச் சுற்றி சைக்கிளில் சென்றுள்ளார்.

அது மாத்திரமல்லாது குறித்த வங்கியிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்டு வருபவர்களை, கதவின் வெளிப்பகுதியில் இருந்து அவர்களை வரவிடாமல் தடுத்து அச்சுறுத்தியும் உள்ளார்.

இவ்விடயம் தொடர்பான தகவலை கேள்வியுற்ற பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த நபரை சுற்றிவளைத்து அவருடைய கையில் இருக்கும் பொருட்களை கீழே போடுமாறு எச்சரித்ததுடன் அவரை கைது செய்துள்ளனர். அவருடைய பையில், ஒரு ஜோடி பெண்களின் உள்ளாடைகளும் இரண்டு ஊசிகளும் மாத்திரை குப்பியொன்றும் மார்புகச்சைக்கான கம்பளிகளும் இருந்துள்ளன.

பொதுமக்களை அச்சுறுத்தியதற்காகவும் ஆண்களுக்கு சம்பந்தமில்லாத பொருட்களை வைத்திருந்தமைக்காவும் 15,500 அமெரிக்க டொலர் தண்டப்பணம் விதிக்கப்பட்டு அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .