2025 மே 15, வியாழக்கிழமை

கசப்பான கேள்வி

Gavitha   / 2014 நவம்பர் 19 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில், மாணவர்களுக்கான தேர்வின் போது பிருஷ்டம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லட்டி எனும் நகரில் அமைந்துள்ள ஆட்ரே கெல் எனும் உயர்நிலைப் கல்லூரியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கல்லூரியின் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுப்பரீட்சைக்கு பல மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இத்தேர்வுக்காக அளிக்கப்பட்ட வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வி மாணவ, மாணவியருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அந்த கேள்விகள் இதுதான்,

லாஷமாண்டா எனும் பெண்ணின் பிருஷ்டம் பெரிது. போன்டாவிஸ் எனும் ஆணின் பிருஷ்டம் சிறியது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இதன் பின்னர் இவர்களுக்கு அழகிய குழந்தையொன்று பிறந்துள்ளது. அதன் பெயர் லாபிரின்சஸ். எனவே, இக்குழந்தையின் பிருஷ்டம் சிறியதாக இருக்குமா அல்லது பெரியதாக இருக்குமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை கூறுக என்றும் மற்றுமொரு குழந்தை பிறந்தால், அதனுடை பிருஷ்டம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சாத்தியக்கூறுகள் கூறுக என்று கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு மாணவியின் தாய், 'வினாத்தாளில் இருந்த வார்த்தைகள் அசிங்கமானவை. அந்த கேள்வியை பார்த்துவிட்டு என் மகள் மாத்திரமன்றி அனைவரும் சங்கடமாகிவிட்டனர்' என்றார்.

எவ்வாறாயினும், இது கல்லூரியின் அமைப்பால் வழங்கப்பட்ட வினாத்தாள் கிடையாது என்றும் இதை பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஆசிரியர்களிடம் கோரியுள்ளதாகவும் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .