2025 ஜூலை 14, திங்கட்கிழமை

23 கோடி ஜப்பான் யென் பெறுமதியிலான தங்க கிறிஸ்மஸ் மரம்

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிறிஸ்மஸ் விழாவிற்காக ஜப்பான் நகைக்கடை ஒன்றில் 23 கோடி ஜப்பான் யென் பெறுமதியில தங்க கிறிஸ்மஸ் மரமொன்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டவ்ன்டவுன் பகுதியில் உள்ள தனாகா 'கிகின்ஜோகு ஜுவல்லர்' என்ற நகைக்கடையிலேயே இந்த தங்க கிறிஸ்மஸ் மரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

88 பௌன்ட் சுத்த தங்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த மரம் 40 கிலோ எடை கொண்டது.

2.4 மீட்டர் உயரமும் 1.2 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த மரத்தில் மிக்கி மவுஸ், சின்ட்ரல்லா, டிங்கர் பெல் போன்ற 50 டிஸ்னி கதாபாத்திரங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இம்மரத்தைச் சுற்றி  தங்கத்தால் செய்யப்பட்ட இலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. தானாகவே சுற்றும் வகையிலும் இந்த மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறைந்த பெறுமதியில் கிறிஸ்மஸ் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு 25 சென்றிமீட்டர் உயரத்தில் 20 டிஸ்னி உருவங்கள் பொறிக்கப்பட்ட 1.34 கோடி மதிப்பிலான மினி கிறிஸ்மஸ் மரங்களும் இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

'பெரிய மரத்தை வாங்க இதுவரை யாரும் வரவில்லை. ஆனால், சிறிய மரத்தை வாங்க சிலர் முன்வந்துள்ளனர்' என கடை அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .