2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

35 வருடங்களில் நூறு கலன் இரத்தம் வழங்கிய அமெரிக்கர்

Kogilavani   / 2013 மே 31 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

35 வருடங்களில் நூறு கலன் அல்லது 66 பைன்ட் இரத்தம் வழங்கிய அமெரிக்கர் ஒருவர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த  ஹரோல்ட் மென்டெனோல் என்று அழைக்கப்படும் 84 வயதுடைய வயோதிபரே இத்தகைய அரியசேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

இவரது மனைவி பிரேங்கி,  மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த நாள் முதல் இவர் இவ்வாறு  இரத்ததானம்செய்து வருகின்றாராம்.

இதற்கமைவாக இவர் கடந்த 1977 ஆம்  ஆண்டு முதல் இவ்வாறு இரத்ததானம் செய்து வருகிறார்.

இதுவரை இவர், 100 கலன் அல்லது 66பைன்ட் இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இரத்தம் வழங்குவது மட்டுமே மனிதனால் செய்யக்கூடியது. அது வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுகின்றது. இரத்தம் வழங்குவதால் எனது வாழ்க்கை பயனுள்ளதாக மாறியுள்ளது' என அவர் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .