2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிள்ளைகளை 5 வருடங்களாக அறையில் அடைத்து வைத்த பெண்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பிள்ளைகளை 5 வருடங்களாக படுக்கையறையினுள் அடைத்துவைத்த குற்றத்திற்காக 10 வருட சிறைதண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி பெண் தனது தனது மகளான டயானாவையும் 6 வயது மகனான பவெலையும் தனது வீட்டின் படுக்கையறையில் வைத்து அந்த அறையின் கதவில் ஆணிகளை அடித்து, கடந்த 5 வருடங்களாக சிறைப்படுத்தி வைத்துள்ளார்.

தனது இழந்த வாழ்க்கையை மீண்டும் திரும்பப் பெறுவதற்காக தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார். இறுதியில் மேற்படி இருவரும் தமது பாட்டியினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை கேள்வியுற்ற சமூகவியலாளர்களும், பொலிஸாரும் பெரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இவ்விரு பிள்ளைகளும் கடந்த 5 வருடங்களாக மிகவும் அச்சம்நிறைந்த சூழலில் வாழ்ந்துள்ளனர். அங்கு மலசலக்கூடமோ குளியலறையோ இருக்கவில்லை. அச்சிறுவர்கள் உறங்குவதற்கான மெத்தையை தவிற அங்கு வேறு எதுவும் இருக்கிவில்லை.

அப்பிள்ளைகள் மீட்கப்பட்டபின் மெத்தையை வெளியில் எடுத்தபோது மெத்தைக்கடியில் ஒரு தொகை புழுக்களும் மூட்டைப் பூச்சிகளும் கூட்டமாக காணப்பட்டன என  அப்பிள்ளைகளின் பாட்டி தெரிவித்தார்.

  இரினா யேகோராவோ வயது 24 என்ற பெண்ணே மேற்படி பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

"நான் எப்போதும் இந்த பிள்ளைகள் குறித்து கவலையடைந்ததில்லை. நான் மறுபடியும் பழைய வாழ்கைக்கு திரும்ப வேண்டும்" என அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிள்ளைகளுக்கு கதவில் இருந்த துவாரத்தினூடாகவே தாயார் உணவு வழங்கியுள்ளார். ஆனால், அவர்களது பாட்டி இரகசியமாக உணவை படுக்கையறையின் ஜன்னலினூடாக வழங்கியுள்ளார்.

"மேற்படி பிள்ளைகள் பட்டினியில் கிடந்ததை கண்டுள்ளேன். அதற்கு பொருளாதார பிரச்சினை காரணமில்லை. பெற்றோர்கள் அவர்களை நன்கு பராமரிப்பதை தவிர்த்துவிட்டனர். ஆனால்  இரினா என்னையும் அக்குழந்தைகளிடம் நெருங்க விடமாட்டாள்.

இரினா எனது மகள். நான் அவளை நேசிக்கிறேன். ஆனால்  அவள் செய்த இந்த கொடூரமான செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சமூகவியலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இத்தகவலை வழங்கினேன்" என அப்பிள்ளைகளின் பாட்டி தெரிவித்துள்ளார்.

மேற்படி பிள்ளைகள் கடும் சோதனைகளால் உடல் ரீதியாகும் உள ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர் என அரச வழக்குத்  தொடுநர் தெரிவித்துள்ளார்.

"அவ்விருவரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர்களால் பேச அல்லது நடப்பதற்கு முடியும். நிறங்களுக்கு இடையிலான வேறுபாட்டை அச்சிறுவனால் உணர முடியவில்லை. அவர்களது மனோபாவங்கள் மிகவும் பின்னடைவில் உள்ளது" என வழக்குத் தொடுநர் அலுவலகத்தின் பேச்சாளரான  நினா லிவோனோவா தெரிவித்துள்ளார்.

இரினா மற்றும் அவரது கணவர் இருவருமே மதுபாவனைக்கு அடிமையானவர்கள். சிறுவர் கொடுமை மற்றும் தவறான சிறை தண்டனை என்பவற்றுக்காக மேற்படி இருவரும் சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .