2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் 80 வயது முதியவர்

Kogilavani   / 2014 ஜனவரி 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரானைச் சேர்ந்த அமோவ் என்ற 80 வயது முதியவர் கடந்த 60 வருடங்களாக குளிக்காமல் இருந்து சாதனைப்படைத்துள்ளார்.

இவர் பழுதான இறைச்சியையும் இறந்த உயிரினங்களில் மாமிசத்தையும் உண்டு வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இளம்வயதில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை அடுத்து, சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இவரை பிடித்து குளிக்க வைக்க ஊர்க்காரர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.

இவர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவரின் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974ஆம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட அவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.

தற்சமயம் இந்த ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து அமோவ் சாதனைப்படைத்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .