2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

8 ஆவது மாடி வீட்டிற்கு பறந்து வந்த மயில்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 8 ஆவது மாடியிலுள்ள தனது வீட்டிற்கு வந்த மயிலொன்றைக்கண்டு அதர்ச்சியடைந்துள்ளதுடன் இப்போது அதனை வளர்ப்பதற்கான உணவு முறைகள் குறித்து இணையத்தளத்தில் தேடி வருகிறார்.

சீனாவின் சோங்கிங் நகரில் வசித்து வரும் ஆன் கியு என்ற பெண்ணின் வீட்டிற்கே இவ்வாறு மயில் பறந்து வந்துள்ளது.

'நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளை வீட்டின் முன் அறையில் சத்தமொன்றை கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தேன். அங்கு மயிலொன்று என்னை முறைத்த வண்ணம் இருந்தது. 8 ஆவது மாடியிலுள்ள வீட்டிற்கு மயில் பறந்து வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

அப்பறவையை என்ன செய்வதென உடனடியாக தீர்மானிக்க முடியாத நிலையில், அவரது குளியலறையில் நாய்க் கூண்டொன்றில் வைத்து மயிலை அவர் வளர்த்து வருகிறாராம்.

'நான் இணையத்தளத்தில் மயிலுக்குரிய உணவுவகைகளை தேடி வருகின்றேன்.  மயிலின் விருப்பமான உணவு சோளம் என்று இணையத்தளங்களில் கண்டறிந்தேன். ஆனால் நான் சோளத்தை  கொடுத்தாலும் அது உண்ணவில்லை|' என அவர் கூறுகிறார்.

உள்ளூர் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் வந்து இம்மயிலை கொண்டு செல்வார்களென தான் எதிர்பார்ப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • IBNU ABOO Sunday, 07 August 2011 10:21 AM

    மயிலே , மயிலே இறகு போடு என்றால் போடாத மயில் தன்னை முழுமையாக ஒரு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளது. உலகின் பரம்பரை ,பாரம்பரியமான உண்மைகளும் ,வழக்கங்களும் கால வெள்ளத்தில் மாறிவரும் அடையாளங்கள் தான் இவை..மனிதனும் மாறிவருகிறான் மோசமான தடயங்களுடன். மாற்றங்கள் ஏமாற்றங்களே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .