2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

8 வயதில் 3 அடி கூந்தல்

Kogilavani   / 2013 ஜூன் 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


8 வயது உடைய சிறுமியொருவர் 3 அடி நீளமான கூந்தலுடன் விளங்குகின்றமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொட்னா ஸ்டொட்ஸ்கா என்ற சிறுமியே இவ்வாறு 8 வயதில் 3 அடி நீளமான கூந்தலுடன் விளங்குகிறார்.
இவர் தனது நான்காவது வயதிலிருந்து தலை மயிர் வெட்டுவதை தவிர்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனிலிருந்து கடந்த டிசெம்பர் மாதமே இவரது குடும்பம் லண்டனுக்கு சென்றுள்ளது. லண்டனில் கல்வி பயின்றும் வரும் இச்சிறுமிக்கு தலையை வாருவதற்காக இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படுவதாக அவரது தாய் கூறியுள்ளார்.

'நான் எனது கூந்தலை நேசிக்கின்றேன். ஏனெனில் என்னுடைய கூந்தலின் நீளத்தை போல யாருடைய கூந்தலும் நீளமில்லை' என பொட்னா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'அம்மா இதற்கு மேல் எனது தலைமயிரை வெட்டவேண்டாம் என்று நான்கு வயதில் எனது அம்மாவுக்கு கூறினேன்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொட்னாவில் கூந்தலை 10 நாட்களுக்கு ஒருதடவை கழுவுவதாகவும் இதன்போது, செம்போ மற்றும் கண்டிசனர் ஆகியவற்றை பயன்படுத்துவதாகவும் அவரது தாய் ஒல்கா (வயது 36) தெரிவித்துள்ளார்.

இதற்காக இரண்டுபேரும் இரண்டு மணித்தியாலங்களை செலவிடுகின்றனர்.

'உக்ரைனில் இருக்கும்மட்டும் பொட்னா பிரபல்யமடையவில்லை. லண்டனுக்கு சென்ற பின் பொட்னாவின் பாடசாலை நண்பிகள் அவளது கூந்தலை பார்த்து பிரமித்து போனார்கள்'என பொட்னாவின் தாய் தெரிவித்துள்ளார்.

'எனது எதிர்காலம் எனது கூந்தலின் நீளத்திலேயே தங்கியுள்ளது' என பொட்னா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .