2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

93 வயதில் 5ஆவது திருமணம் செய்த ஊடக நிறுவன தலைவர்

Freelancer   / 2024 ஜூன் 03 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஊடக நிறுவன தலைவர் ரூபர்ட் முர்டோக், தனது 93ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவரான எலெனா, தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். உயிரியல் துறை வல்லுநரான இவர், ரஷ்ய நாட்டு அரசியல்வாதியான அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான ரூபர்ட் முர்டோக்குக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். 1985இல் அமெரிக்காவில் குடிபெயர்ந்த இவருக்கு, கடந்த 1956இல் முதல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 1967, 1999 மற்றும் 2016இல் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். அது அனைத்தும் விவாகரத்தில் விடை பெற்றது. இந்த சூழலில் தற்போது எலெனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் கோர்ப்பரேஷன் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவியுள்ள ரூபர்ட் முர்டோக்குக்கின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டொலர்களாகும். இந்நிலையில், இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X