Shanmugan Murugavel / 2020 நவம்பர் 27 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்பந்தாட்ட ஜாம்பவானான டியகோ மரடோனா அரசியலில் நுழைந்திருக்காத போதும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள இடதுசாரித் தலைவர்களான கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோ, வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், இந்நாள் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, பொலிவியாவின் ஜனாதிபதி இவோ மொராலெஸ் ஆகியோரை முன்னிறுத்துவதில் வகிபாகமொன்றை வகித்து அவர்கள் சர்வதேச ரீதியில் கவனம் பெற உதவியிருந்தார்.
தனது நாயகனான ஜனாதிபதி காஸ்ட்ரோவை இரண்டாவது தந்தையாக மரடோனா கருத்திற் கொண்டிருந்ததுடன், அவரது முகத்தை தனது இடது காலில் பதித்திருந்தார். ஒரு முறை அரசியலுக்குச் செல்லுமாறு மரடோனாவை கஸ்ட்ரோ வலியுறுத்தியிருந்தார்.
1987ஆம் ஆண்டு முதலில் கஸ்ட்ரோவைச் சந்தித்திருந்த மரடோனா, தனது ஆர்ஜென்டீன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கஸ்ட்ரோவைப் பேட்டி கண்டிருந்தார்.
இதேவேளை, கஸ்ட்ரோ இறந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதே தினமான நவம்பர் 25ஆம் திகதியே மரடோனாவும் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உயரமான இடங்களில் போட்டிகளுக்குத் தடைக்கெதிராக பொலிவியாவின் செயற்பாட்டுக்கு மரடோனாவின் ஆதரவைக் காண்பிப்பதற்காக தனக்கெதிராக போட்டியொன்றை பொலிவியாவின் லா பஸ்ஸில் விளையாடுவதற்கு மரடோனாவை மொராலெஸ் சேர்த்திருந்தார்.
இதேவேளை, கடந்தாண்டு ஆர்ஜென்டீன ஜனாதிபதித் தேர்தலில் கிறிஸ்டினா பெர்ணான்டஸின் உப ஜனாதிபதி வேட்பாளராக செல்வது குறித்து மரடோனா கருத்தில் கொள்வதாக ஆர்ஜென்டீனப் பத்திரிகையான கிளரின் 2018ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், புரட்சியாளர் சே குவாராவின் பதிப்பையும் மரடோனா கொண்டிருக்கிறார்.
28 minute ago
35 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
44 minute ago
45 minute ago