2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 07 பேருடன் படகு ஒன்றை கடற்படையினர் கைப்பற்றினர்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினர், சனிக்கிழமை (09) அன்று  பிற்பகல் மன்னாருக்குவடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு கொன்றையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 

நாட்டின் கடல் எல்லைகளை மீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை (09) அன்று மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை வட மத்திய கடற்படைக் கட்டளைக் குழு அவதானித்ததோடு, மேலும், வட மத்திய கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோரரோந்துக் கப்பல்களை அனுப்புவதன் மூலம் இலங்கைக் கடல் பகுதியிலிருந்து குறித்த மீன்பிடிக் கப்பல்களை அகற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டு எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.   

இந்த நடவடிக்கையின் போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்ட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X