Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (25) அன்று இடம்பெற்றது
“பருத்தித்துறை நகரைமீட்போம்“ எனும் தொனிப்பொருளில் பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை துறைமுகதடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கிய போதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக பருத்தித்துறை தபால் அலுவலகம் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் மற்றும் பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்பு மிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் மற்றும் நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம்மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இதற்கு முழுமையான காரணமாக இருக்கும் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் பல கருத்துக்களை உள்ளடக்கிய மயணர் பருத்தித்துறை பிரதேசசெயலகத்தில் கொடுக்கபட்டது
அதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டது
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி வேந்தன் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்களும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் m.Aசமந்திரன்அவர்களும் பிரதேசசபைதவிசாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர் .
19 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago