2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இராமேஸ்வர மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம்  துறைமுகத்தில்இருந்து  திங்கட்கிழமை(30) அன்று மீன்பிடிக்க சென்ற   ஏழு மீனவர்கள் திங்கட்கிழமை இரவு  எல்லை தாண்டி மீன்பிடித்த நிலையில்  இலங்கை கடல் பகுதியில் வைத்து  கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

தலைமன்னார் கடற்படையினர்விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை செவ்வாய்க்கிழமை(1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்ஒப்படைத்தனர்.

 கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான்  குறித்த 07 மீனவர்களையும்எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க உத்தரவிட்டார்.

எஸ்.ஆர்.லெம்பேட்
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X