Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் ஸ்ரீதரன் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இப் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் யாழ் செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரும் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில்,வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்திய போராட்டத்தை ஆரம்பமானது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கு காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு பொலிஸார் இராணுவத்தின் அடாவடித்தனத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.
நிதர்சன் வினோத்
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025