2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எல்லை தாண்டிய நான்கு மீனவர்கள் கைது

Janu   / 2025 ஜூலை 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை(21) காலை 88 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த ஒரு படகையும் அதிலிருந்த தங்கராஜ, செல்வம், இருளாண்டி, லிங்கம் ஆகிய நான்கு மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்கள் நான்கு பேரையும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 விசைபடகுகளும், அதிலிருந்த 185 மீனவர்களும் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கடற்படையினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X