Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்களை கையளிக்களிக்கும் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (24) அன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம்.சந்திரகுமார் மற்றும் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்ட இக்கடிதத்தில் சீ.வீ. விக்னேஸ்வரன், கெள.கஜேந்திரகுமார்பொன்னம்பலம் சார்பில் செ.கஜேந்திரன், கௌ.செல்வம் அடைக்கலநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ்.நவீந்திரா ஆகியோர் கையொப்பம் இட்டுஇருந்தனர்.
காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப்படும் மனிதப்புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனை,தொழில்நுட்பம், நிதி,பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கி இருந்தன.
இச் சந்திப்பின் போது அவற்றை நேரடியாக ஐ.நா ஒருங்கிணைப்பாளரிடம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன.
3 minute ago
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 hours ago
14 Oct 2025
14 Oct 2025