2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஓமந்தை பொலிஸார் காணி அபகரிப்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியினை பொலிஸார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது.

A9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை திங்கட்கிழமை (30) அன்று துப்புரவு செய்த ஓமந்தை பொலிஸார் குறித்த இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரிய தனது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிஸார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரிய வருவதோடு குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .