Janu / 2026 மார்ச் 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக சென்று, அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் சார்ந்த பின்வரும் குறைபாடுகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன:
குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தீர்வுகளைப் பெற்றுத்தரத் தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
விஜயரத்தினம் சரவணன்


5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago