2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கடலில் பல்டி அடித்த இளைஞன் உயிரிழப்பு

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
 
தன்னுடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து திங்கட்கிழமை (18) மதியம் தாளையடி கடற்கரைக்கு வந்துள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கடல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இதன்போது தலையில் காயமடைந்த இளைஞனை உடனடியாக நண்பர்கள் மீட்டு உழவு இயந்திரத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன்  அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். 
 
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
 
மருதங்கேணி பொலிஸார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X