Janu / 2026 ஜனவரி 07 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாந்தை, மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (6) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த குறித்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி பின்னர் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன் போது குறித்த கெப் ரக வாகனத்தை செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்

2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026