2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கண்காட்சி அங்குரார்ப்பணம் நிகழ்வில் சபாநாயகர்

R.Tharaniya   / 2025 ஜூலை 20 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியையும், திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனையும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சனிக்கிழமை (19) மாலை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சி யாழ்ப்பாணம் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .

ஆயிரக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டனர். திணைக்களம் வெளியிட்ட நூல்களையும் வாங்கி பயன் பெற்றனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X