R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) அன்று மாலை யாழ்ப்பாணம் பண்ணைபகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது.இந்த மணல்,இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ்வு முயற்சித்து வருகிறது. இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக நிலங்களையும் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகள், இளையோர் என பலரும் கலந்து கொண்டதுடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.






நிதர்சன் வினோத்
39 minute ago
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
4 hours ago