2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

Janu   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான  கேரள கஞ்சா பொதிகள் புதன்கிழமை (3) காலை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் ,  கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை (3) காலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர்.

இதன் போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோ கிராம் எடை கொண்டது எனவும்  சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன்  அதன் பெறுமதி பல கோடி என தெரிய வருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .