Janu / 2025 ஜூலை 10 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவாலி சென். பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (09) மாலை சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென்.பீட்டர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 135ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
நினைவேந்தலின் போதும் புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகம் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
பு.கஜிந்தன்










2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago