Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனைமீறிஅங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை (13) அன்று நண்பகல் 12.00 மணியளவில் செம்பியன்பற்று சென்பிலிப்நேரியார் கடற்றொழிலாளர் சங்கஉறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மது போதையில் தடிகளுடன் கரை வலை வாடிகளுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த மீனவர்கள் மீதுதாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago