2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு வியாழக்கிழமை(18) அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார். பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் ஒக்ரோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்காகன அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.

ஒக்ரோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் ஒக்ரோபர் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X