2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தேவிபுரத்தில் கசிப்பு சிக்கியது

Editorial   / 2025 நவம்பர் 05 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன புதன்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் தேவிபுரம்   பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அங்கு கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில்,  கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவித்த புதுக்குடியிருப்பு பொலிஸார்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X