R.Tharaniya / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகிழக்கில் தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டது பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுர அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்போம் ஸ்ரீதரன் யாழில் தெரிவிப்பு
வியாழக்கிழமை (18) அன்று காலை யாழ் நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் உடைய வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை புதன்கிழமை (17) அன்று மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம் இதனை புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும் ஒரு சில தனி நபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழுபறி நிலையில் காணப்பட்டது.
இருந்தாலும் கூட தற்போது அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக்கட்டடத்தை மீள அமைத்து இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீக அடையாளமாக நிலை நிறுத்துவதற்கு உரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது
அதன் அடிப்படையில் யாழ்ப்பாண நல்லூர் பகுதியில் உள்ள மந்திரி மணையை யாழ்ப்பாணம் மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதற்குரிய ஆலோசனைகளை பெற்றுள்ளேன். இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago