Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா கிருஷ்ணகுமார்
கிளிநொச்சி - புதுமுறிப்பு நன்னீர் மீன்கள் உற்பத்தி நிலையத்திற்குக் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (27) கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி - புதுமுறிப்பு நன்னீர் மீன்கள் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே குறித்த விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த நிலையத்தின் முன்னேற்றம் மற்றும் உற்பத்தியாளர்களின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் புதுமுறிப்பு நன்னீர் மீனவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
3 hours ago