Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவிற்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகளை அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி, ஆலய கணக்குபிள்ளையால் செவ்வாய்க்கிழமை (27) கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் அமையப்பெற்றிருந்தது.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .