2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவில் நான்கு இந்திய மீனவர்கள் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (05) அன்று இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் , படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களையும் , கைது செய்த கடற்படையினர் , அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை , காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற கடற்படையினர் , அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்கு , கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X