R.Tharaniya / 2025 ஜூலை 20 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி படகு மற்றும்,வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை கடலில் வைத்து எரியூட்டப்பட்டநிலையில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
-விடத்தல் தீவு கடற்கரையில் கடந்த நிலை தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டமீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால்இரவு நேரங்களில் கடலில் தூக்கி வீசப்பட்டு வந்த நிலையில்,குறித்த வெளி இணைப்பு இயந்திரங்கள்மீட்டு மீனவர்கள் கடல் தொழிலுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் விடத்தல் தீவு மேற்கு மீனவ கூட்டுறவு சங்கத்தின் பொருளாளர் கடந்த வெள்ளிக்கிழமைமீன் பிடிக்க கடலுக்குச் சென்று மீண்டும் படகு விடத்தல் தீவு கடற்கரையில் கட்டப்பட்டது.குறித்த படகில் பெறுமதியான வெளி இணைப்பு இயந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை (19) அன்று காலை மீண்டும் தொழிலுக்குச் செல்ல குறித்த படகின் உரிமையாளர் கடற்கரைக்குச்சென்ற போது படகை காணவில்லை. இதன் போது குறித்த படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவை சற்று தொலைவில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர் அடம்பன் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்த நிலையில் அடம்பன் போலீசார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பின்னர் தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று எரியூட்டப்பட்டபடகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு,விசாரணைகளையும்முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவம் விடத்தல் தீவு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .