Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.
15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 2 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வின்சன் டீ போல் டக்ளஸ் போலுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட 4 பேரும் ஆதரவு வழங்கினர்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிநடப்பு செய்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இருவர் மற்றும் அர்ச்சுனா அணி ஆதரவு சுயேட்சை குழுவின் ஒருவர் வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்தனர்.
நிதர்ஷன் வினோத்
32 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
54 minute ago