2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பாரதியாரின் 104வது நினைவு தினம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது நினைவு தினம் வியாழக்கிழமை (11) அன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், திருமதி கிருஷ்ணராஜ் லிசாந்தினியால் கவி அஞ்சலியும், ஆசிரியர் கதிர்வண்ணனால் நினைவுகளையும் மேற்கொள்ப்பட்டிருந்தது.

வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகரசபை பிரதி மேயர், மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

க. அகரன்

 

 

 
 
 
 
 
 
 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .