R.Tharaniya / 2025 மே 19 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயம பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தைஅருட்பணி.டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்பகன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) அன்று இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக இறுதி யுத்தத்தில் இறந்து போன மக்களை நினைத்து பங்குத்தந்தைபங்கு மக்கள் முன்னிலையில் சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆலயத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால்நினைவு பாதையின் முன்னிலையில் மரியாதை செலுத்தி மலர் கொத்துக்களை அங்கு வைத்த பினர் மெழுகுவர்த்திகளைஏற்றி இறந்து போன தம் உறவுகளுக்காகஅஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வழிபாடு இடம்பெற்றது. இவ்வழிபாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாசிக்கப்பட்டமையுடன், இறந்து போன காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காகமன்றாட்டுக்களும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்தின் பிரதான வாயிலில் வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மன்னார் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் அருட்பணி.கிறிஸ்து நேச ரட்ணம் அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டமையுடன், நிகழ்வை கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள்சிறப்பாக ஒழுங்குபடுத்திஇருந்தது குறிப்பிடத்தக்கது.





எஸ்.ஆர்.லெம்பேட்
1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026