Janu / 2026 மார்ச் 10 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
"பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம்" எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை மன்னாரில் வெகுவிமரிசையாக இடம்பெற்றன.
மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில், மன்னார் குடிசார் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாவட்டத்திலுள்ள பல்வேறு பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தன.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஏராளமான மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்காக தோளோடு தோள் நின்று உழைக்கும் ஆண்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிறீன் பீஸ் சவுத் ஏசியா (Greenpeace South Asia) அமைப்பின் அனுசரணையுடன், மன்னார் பிரதான நூலகச் சுவரில் பெண்களால் வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
"காலநிலை நீதிக்கான பெண்கள்" எனும் தொனிப்பொருளில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இப்பகுதியின் வளமான உயிரியல் பல்லுயிர் தன்மையையும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களுக்கு எதிராக பெண்கள் காட்டும் தலைமைத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த சமூகச் சுவரோவியம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்
















4 minute ago
22 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
35 minute ago
45 minute ago