R.Tharaniya / 2025 மே 22 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் கொழும்பில் இருந்து வந்த அரச பேருந்தும்,வேனும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் புதன்கிழமை (21) அன்று இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த அரச பேருந்தானது கிளிநொச்சி உமையாள்புரத்தில் வேன் ஒன்றை முந்தி செல்வதற்கான முயற்சித்த போது இவ் விபத்து இடம்பெற்றது.
இவ் விபத்தில் எவருக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் வாகனம் மட்டும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பு.கஜிந்தன்
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026