2026 மார்ச் 12, வியாழக்கிழமை

போதை பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

R.Tharaniya   / 2025 ஜூன் 08 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் சனிக்கிழமை (7) அன்று காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா,ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை,சமையல் மஞ்சள்,திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்ட விரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் ஐந்து பேர்அடங்கிய தனிப்பிரிவு பொலிஸார் குழுவாக   இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்ட தனிப்பிரிவு பொலிஸார்  காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில்  ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து பொலிஸார் அந்த நபரை மடக்கி பிடித்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த போது காரில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாமூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக இராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த  ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின்  இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

இராமேஸ்வரம் மீன் பிடித்து துறை முகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஆர்.லெம்பேட்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .