Janu / 2025 நவம்பர் 17 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) அன்று மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. அத்துடன் மின்கம்பமும் முறிந்ததால் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையிலான குழுவினர், வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்த மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அத்துடன் அராலி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியிலும் அந்த குழுவினர் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொது இடம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தெரிவித்துள்ளார்.
பு.கஜிந்தன்

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago