2025 ஜூலை 19, சனிக்கிழமை

“ மாவா விற்பனை அதிகரிப்பு ; பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை ”

Janu   / 2024 ஜூன் 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் மாவா எனப்படும் போதைப்பொருளை  கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில்  பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும்  பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதமையால் குறித்த பகுதிகளில் இளைஞர் குழுக்கள் அதிகளவில் கூடி நின்று குறித்த போதை பார்க்கினை கொள்வனவு செய்து உண்பதை அவதானிக்க முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் , போதை ஒழிப்பு தொடர்பான யுக்திய நடவடிக்கை  இலக்கங்களுக்கு  தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார்  இவ்வாறான விடயங்களை கண்டும் காணாது இருப்பதாகவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர் .

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X