Janu / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் அளம்பில் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதானம் பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சண்முகம் தவசீலன்


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago