2025 மே 09, வெள்ளிக்கிழமை

மின் கசிவினால் முற்றாக எரிந்த வீடு

Janu   / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் வீடொன்று திங்கட்கிழமை இரவு மின் கசிவினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அயல் வீட்டில் இருந்து வயர் ஊடாக மின்சார இணைப்பினை பெற்றுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் திடீர் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த பொழுதும் வீடு முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X