2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப்பகுதியில் புதன்கிழமை (10) அன்று மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளானது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்- துவிச்சக்கர வண்டி ஒன்றில் சென்றவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது.  அதன் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து  வலது பக்கம் சென்று எதிர் திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.  விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .