R.Tharaniya / 2025 மே 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (19) அன்று உயிரிழந்துள்ளார்.
ஊரெழு கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் உயிரிழந்த இளைஞன் அவரது நண்பருடன் கடந்த 11ஆம் திகதி யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது வீதியில் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டனர். இதன்போது பருத்தித்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்த.நால்வரும்
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் வீடு திரும்பினர். இருப்பினும் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது பிரேத தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிரேத விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
எஸ் தில்லைநாதன்
27 minute ago
1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
6 hours ago
8 hours ago