2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழில்.கர்நாடக இசை கச்சேரி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தூதரகம் ஊடாக  யாழ்ப்பாணத்திலு ஆண்டுதோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை (19) அன்று   நித்யாஶ்ரீ மகாதேவன் அவர்களால் நடத்தப்பட்ட பக்தி சார்ந்த கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி, இந்திய அரசின் 12 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகையால் கட்டப்பட்ட யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் (JTCC) நடைபெற்றது.

டாக்டர் நித்யாஶ்ரீ, முருகன் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை ஆன்மாவை உலுக்கும் வகையில் பாடி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். அவருடன் இந்தியாவிலிருந்து வந்த திறமையான கலைஞர்களின் இசைக் குழுவும் இணைந்து கச்சேரியில் பங்கேற்றது.

இந்த கச்சேரி நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா காலத்தில் நிலவிய ஆன்மீகச் சூழலுடன் ஒத்திசைந்த இந்நிகழ்ச்சி, அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.

இந்த நிகழ்ச்சி இந்திய சாஸ்திரிய இசை மற்றும் பண்பாட்டு மரபின் கொண்டாட்டமாகவும், இந்தியா மற்றும் இலங்கையின் வட மாகாணத்திற்கிடையிலான ஆன்மீக மற்றும் பண்பாட்டு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X